Velmurugan s | Published: Mar 24, 2025, 6:00 PM IST
சட்டமன்றத் தொகுதி மறுசீரமைப்பு நடவடிக்கை குறித்து முதல்வர் ஸ்டாலின் விளக்கம் அளித்துள்ளார். அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒன்றிய அரசை வலியுறுத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அடுத்தகட்டமாக பிரதமர் அவர்களைச் சந்திக்கவுள்ளனர்.நமது உரிமைகளை, நம் போல் பாதிக்கப்படும் மாநிலங்களின் உரிமைகளை மீட்டெடுத்திட, நியாயமான தொகுதி மறுசீரமைப்பைப் பெற்றிட தமிழ்நாட்டிலிருந்து நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் உள்ள கட்சிகளின் எம்.பி.க்களை எல்லாம் அழைத்துச் சென்று பிரதமர் சந்திக்கவிருக்கிறோம் என்பதையும் இந்த அவைக்குத் தெரிவித்து அமைகிறேன்.