
டி.பி.ஆர் அறிக்கை தயார் செய்யப்பட்டு வழங்கப்பட்டது அதன் அடிப்படையில் அவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் சட்டம் ஒழுங்கு, கொலை கொள்ளை கஞ்சா பயன்படுத்துதல் ஆகியவற்றை மடைமாற்றும் நோக்கில் மெட்ரோ ரயில் திட்டத்திற்கு எதிராக கோவையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படுகிறது . தமிழக அரசின் dpr அறிக்கை 15ஆம் தேதியே திருப்பி அனுப்பப்பட்ட நிலையில் அதற்கு மறுநாளே முதலமைச்சர் அதற்கான அறிக்கை வெளியிடாதது ஏன்?பிரதமர் வரும்போது போராட்டம் நடத்த வேண்டும் என்பதற்காகவே திராவிட முன்னேற்றக் கழகம் நேற்றைய தினம் இந்த பிரச்சினையை கையில் எடுத்துள்ளது.