தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரம் கிராமத்தில் செல்வம் முத்து விநாயகர் கோயில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவின் போது மாட்டு வண்டிப் பந்தயம் நடைபெற்றது. ஏராளமானோர் பந்தயத்தில் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. போட்டியை ஏராளமான பொது மக்கள் கண்டு ரசித்தனர்.