vuukle one pixel image

Vijay Vs Thirumavalavan: தவெக தலைவர் விஜய்யை கடுமையாக விமர்சித்த திருமாவளவன்!

vinoth kumar  | Published: Nov 8, 2024, 1:32 PM IST

தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிவாண்டி வி.சாலையில் கடந்த அக்டோபர் மாதம் 27ம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில் பேசிய தவெக தலைவர் விஜய்: திமுகவையும், பாஜகவும் கடுமையாக விமர்சித்தார். குறிப்பாக  எங்களுடன் கூட்டணி வைப்பர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று கூறி தமிழக அரசியல் அரங்கை அதிரவைத்தார்.  ஆனால் அதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளை விமர்சிக்கவில்லை. இதனால் தவெக விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் கூட்டணி அமைக்க அதிக வாய்ப்புள்ளதாக கூறப்பட்டு வந்தது. இந்நிலையில் தவெக தலைவர் விஜய்யை திருமாவளவன் விமர்சித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.