
தமிழரை துணை குடியரசு தலைவராக ஆக்கியிருக்கிறோம் பெருமையோடு நாங்கள் நின்று கொண்டிருக்கிறோம் என்றும் அதேசமயம் தமிழ்நாட்டில் தமிழ் இனத்திற்கு துரோகம் செய்தார்கள் என்று ஒரு கட்சி ஆட்சி செய்து கொண்டிருப்பதாகவும் அவர்களுக்கு தமிழ் மக்கள் தான் ஓட்டு போட்டார்கள் என்றும் திமுகவை சுட்டிக்காட்டிய அவர் தமிழருக்கு எந்த ஒரு ஆதரவையும் கொடுக்காததை வரலாறு மன்னிக்காது என தெரிவித்தார். முப்பெரும் விழா நடத்தினாலும் நாப்பெரும் விழா நடத்தினாலும் இனிமேல் உங்களுக்கு வெளியேற்றம் தான் என தெரிவித்தார். No ReEntry For DMK என்று தெளிவாக கூற முடியும் என தெரிவித்தார் தமிழிசை சௌந்தரராஜன்.