Velmurugan s | Published: Apr 9, 2025, 3:00 PM IST
தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் தமிழக அரசுக்கும் இடையே மோதல் போக்கு நாளுக்கு நாள் உச்சம் பெற்று வருகிறது. தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல் வழங்க மறுத்து வந்தார். இச்சூழலில் ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. ஆளுநரின் பரிசீலனைக்காக அனுப்பிய 12 மசோதாக்கள் இன்னும் நிலுவையில் இருக்கின்றன. மசோதாக்களைப் பரிசீலிக்காமல் புறக்கணிப்பதன் மூலம் ஆளுநர் தனது அரசியல் சாசனக் கடமையைச் செய்ய தவறுகிறார் என தமிழக அரசு சார்பில் குற்றம்சாட்டப்பட்டது. தமிழக ஆளுநர் ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் நிறுத்தி வைத்தது சட்டவிரோதம் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.