Velmurugan s | Published: Mar 27, 2025, 2:00 PM IST
தமிழகத்தில் இந்தி மொழிக்கு எதிர்ப்பு தெரிவிப்பது தொடர்பாக உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் கருத்து தெரிவித்துள்ளார். இதில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மதம், மொழி அடிப்படையில் பிரிவினையை உருவாக்குகிறார். மொழி என்பது ஒற்றுமையை உருவாக்கத்தான் பயன்பட வேண்டும்; மொழியை வைத்து பிரிவினை செய்யக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில் எந்த மொழிக்கும் நாங்கள் எதிரானவர்கள் அல்ல; வாக்கு வங்கி அரசியலுக்காக பேசவில்லை. இது கண்ணியம் மற்றும் நீதிக்கான போராட்டம் என குறிப்பிட்டுள்ளார். மொழி அடிப்படையில் மக்களிடையே பிளவை ஏற்படுத்த முயற்சி நடக்கிறது. மொழி திணிப்பையும், ஆதிக்கத்தையும் எதிர்க்கிறோம். எந்த மொழிக்கும் எதிரானவர்கள் நாங்கள் அல்ல. இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.