FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை

FISH SALE : ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்.! மீன் வியாபாரியின் அசத்தல் அறிவிப்பால் திணறிய மதுரை

Published : Jun 23, 2024, 02:37 PM IST

வாடிக்கையாளர்களை கவரும் வகையில் 10பைசாவிற்கு பிரியாணி, ஒரு ரூபாய்க்கு பிரியாணி என விளம்பரம் செய்வார்கள் தற்போது ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன் என அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்துள்ளார். 

ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன்

மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள யானைமலை ஒத்தக்கடையில் மன்னர் வளைகுடா என்ற பெயரில் மீன் கடை உள்ளது. இந்த மீன் கடையை வழக்கறிஞர் திருமுருகன் என்பவர் நடத்தி வருகிறார். இந்த மீன் கடை தொடங்கி 3 ஆண்டுகளையொட்டி வாடிக்கையாளர்களுக்கு புதிய இலவச அறிவிப்பை வெளியிட்டார். அதன் படி, இந்த மீன் கடையில் ஒரு கிலோ மீன் வாங்கும் ஒரு நபருக்கு ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ மீன் இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டார். இது தொடர்பாக அந்த பகுதி முழுவதும் போஸ்டரையும் ஒட்டினார். 

பொதுவாக ஞாயிற்றுக்கிழமை என்றாலே அசைவ பிரியர்கள் இறைச்சிக்கடைகளில் கூடுவார்கள். அசைவ பிரியர்கள் அதிகமாக இருக்கக்கூடிய மதுரையில் இந்த அறிவிப்பை கேட்டவுடன் சும்மாவா ??இருப்பார்கள் காலை 7 மணி முதல் 8 மணிக்குள்ளாகவே 100க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் மீன் கடை முன்பு குவிந்து வரிசையில் நின்ற மீன்களை வாங்கி சென்றனர்.  சமீப காலமாக தங்களது வியாபார யுக்தியை உரிமையாளர்கள் பல்வேறு விதமாக கையாண்டு வரக்கூடிய வேலையில் மதுரையைச் சேர்ந்த இந்த வழக்கறிஞர் ஒரு கிலோ மீன் வாங்கினால் ஒரு கிலோ மீன் இலவசம் என்று ஆஃபர் அந்தப் பகுதியில் இருக்கக்கூடிய வாடிக்கையாளர்களை வெகுவாக கவர்ந்தது. 

11:35சென்னையில் மாவட்ட அளவிலான தடகளப் போட்டிகள் தொடக்கம் : அமைச்சர் ராஜ்மோகன் தொடங்கி வைத்தார்!
09:01தேர்தல் செலவு தொடர்பான புகார்கள் மற்றும் விமர்சனங்கள்: அமைச்சர் ராஜ்மோகன் பதில் !
04:26வதானேஸ்வரர் கோவிலில் புதிய வெள்ளி ரிஷப வாகன வெள்ளோட்டம் - தர்மபுர ஆதீனம் தொடங்கி வைத்தார் !
05:45மின்சார தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை: அவசர கால டெண்டர் குறித்து அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி!
03:55சென்னை மழைக்கால முன்னெச்சரிக்கை பணிகள்: ஆதவ் அர்ஜுனா வில்லிவாக்கத்தில் மழைநீர் வடிகால் ஆய்வு !
03:04சென்னையில் இலங்கை தூதரக முற்றுகைப் போராட்டம்: வேல்முருகன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் கைது!
08:11சென்னையில் தமிழக வாழ்வுரிமை கட்சி போராட்டம்: இலங்கை துணை தூதரகம் முற்றுகை!
03:12தாராபுரம் சட்டமன்ற இடைத்தேர்தல்: அதிமுக வேட்பாளர் பானுமதி தனது வாக்கைப் பதிவு செய்தார்!
05:43வெற்றி வாய்ப்பை தூக்கி எறிந்துவிட்டு மீண்டும் வாக்கு கேட்பது சரியல்ல : பாஜக தலைவர் தமிழிசை பேச்சு!
03:28தாராபுரம் இடைத்தேர்தல்: மடுக்கம்பாளையம் வாக்குச்சாவடியில் தவெக வேட்பாளர் சத்யபாமா வாக்களித்தார்!
Read more