
முதல் நிர்வாக குழு கூட்டம் இன்று நடைபெற உள்ளது. கட்சி பணிகள்,தேர்தல் பணிகள் குறித்து ஆலோசனை செய்யப்பட்டது. அடுத்தகட்ட சுற்றுப்பயணம் குறித்து விரைவில் தெரிவிக்கப்படும். நீதி மன்ற வழிகாட்டு நெறிமுறைகள் வந்த பிறகு இது குறித்து முடிவெடுக்கப்படும். கரூர் சம்பவம் நடைபெற்ற நாளன்று தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகளை தாக்கினார்கள்...கட்சி முடங்க வேண்டும் என்று நினைத்தார்கள்..அது நிச்சயம் நடக்காது...தேர்தல் சின்னம் வழங்குவதற்கு எல்லாம் நேரம் இருக்கிறது. விஜயின் வாகனத்தை சுற்றி 2500 இருசக்கர வாகனங்கள் வந்தது. பொது இடத்தில் நாங்கள் எதுவும் செய்ய முடியாது. காவல்துறை எங்களுக்கு உதவி செய்யவில்லை. அதிமுக கூட்டங்களில் தமிழக வெற்றிக் கழக கொடி இருந்தது குறித்த கேள்விக்கு, ஒரு மாதத்திற்கு முன்பு என்ன நிலைபாட்டில் இருந்தோமோ அதே நிலைபாடு தான் தற்போதும்...என்று தமிழக வெற்றி கழகத்தின் இணை பொது செயலாளர் நிர்மக்குமார் பேட்டி .