அதிகளவில் அரசு பேருந்து மட்டுமே இந்த பகுதியில் இயக்கப்பட்டு வரும் நிலையில் பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாத காரணத்தினால் குறைந்த அளவிலான பேருந்தில் பொதுமக்கள் நீண்ட நேரம் காத்திருந்து முண்டி அடித்துக் கொண்டு இடம் பிடித்து கோவை திருப்பூர் பகுதிகளுக்கு மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். விடுமுறை முடிந்து திரும்பச் செல்லும் பயணிகளுக்கு சிறப்பு பேருந்துகள் அதிக அளவில் இயக்கி பொதுமக்களின் பயண சிரமத்தை குறைக்க வேண்டுமென பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.