திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்து உள்ள விருப்பாச்சி பகுதியில் வசித்து வருபவர் பட்டதாரி இளைஞர் சுரேஷ் குமார் இவர் பெங்களூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணி செய்து வருகின்றார். இவர் அழிந்து வரும் பனை மரத்தை வளர்க்க அடுத்த தலைமுறை ஊக்குவிக்கும் வகையிலும் பனை பழத்திலிருந்து வீணாகும் நார்களை எடுத்து . சேலம் உள்ளிட்ட ஸ்பின்னிங் டெக்ஸ்டைல்ஸ்களுக்கு அனுப்பி அங்கு நூல்களுடன் இங்கிருந்து அனுப்பப்படும் நார்களையும் எடுத்து சட்டை தயார் செய்து வருவதாகவும் . பட்டதாரி இளைஞர் சுரேஷ்குமார் தெரிவித்தார்.