இந்தியை ஒரு மொழியாக சேர்க்க வேண்டும் என்று நாங்கள் எந்த இடத்திலும் சொல்லவில்லை. 3-வதாக ஒரு மொழியை மாணவர்கள் படிக்க வேண்டும் என்பது தான் புதிய கல்விக்கொள்கையின் நோக்கம்.தமிழ்நாட்டில் கல்வி திட்டங்களுக்கு மத்திய அரசாங்கத்திற்கு ஒத்துழைப்பு கொடுக்காததால் கிட்டத்தட்ட 5 ஆயிரம் கோடி ரூபாய் நிலுவையில் உள்ளது,அரசு பள்ளியில் படிக்கக்கூடிய ஏழை எளிய மக்கள், பட்டியலின மக்கள், வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு மட்டும் தான் 3-வதாக ஒரு மொழியை கற்பிக்க மறுக்கப்படுகிறது. இது நவீன தீண்டாமையின் உச்சமாக இருக்கிறது என்று எல். முருகன் கூறினார்