Watch : நெல்லை பேராத்து செல்லி அம்பாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்! பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Watch : நெல்லை பேராத்து செல்லி அம்பாள் திருக்கோவில் மகா கும்பாபிஷேகம்! பெருந்திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Published : Jul 06, 2022, 11:08 AM IST

நெல்லை வண்ணாா்பேட்டை அருள்மிகு ஸ்ரீ பேராத்துசெல்வி அம்பாள் திருக்கோவில் அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகு விமர்சையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தாிசனம் செய்தனர்.
 

திருநெல்வேலி மாவட்டம், வண்ணாா்பேட்டை தாமிரபரணி நதிக்கரையில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ பேராத்துசெல்வி அம்பாள் கோவில் அமைந்துள்ளது . இங்கு மகா கும்பாபிஷேக விழா இன்று காலை வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக விழாவினை முன்னிட்டு கடந்த 04 -ஆம் தேதி அதிகாலையில் மங்கள இசை விக்னேஸ்வர பூஜை மஹா கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. தாமிரபரணியில் இருந்து தீர்த்தம் எடுத்து வரப்பட்டு முதல் கால யாகசாலை பூஜை சிறப்பாக நடைபெற்றது . அதனைத் தொடர்ந்து நேற்று இரண்டாம் கால யாகசாலை பூஜையும் இரவில் மூன்றாம் கால யாகசாலை பூஜையும் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவான இன்று அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால யாகசாலை பூஜைகள் தொடங்கி காலையில் 6 மணிக்கு மேல் 6.40க்குள் கோவில் விமானம் மற்றும் ஸ்ரீ பேராத்துசெல்வி அம்பாள் பரிவார தேவதைகளுக்கு மஞ்சள் நீர் தெளித்து மகா கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. பக்தர்கள் அம்மனை பக்தி பரவசத்துடன் வழிபட்டனா்.

06:23மதுரையில் வண்டியூர் தீர்த்தக்காடு மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கினார் அமைச்சர் வன்னி அரசு!
05:00சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெளுத்து வாங்கும் கனமழை !
06:11'முரசு' தீவிர புயல் எச்சரிக்கை: சென்னை பட்டினப்பாக்கத்தில் அலைமோதும் சீற்றமிக்க கடல்!
04:03முரசு புயல் எச்சரிக்கை: சென்னை மாநகராட்சியின் ICCC மையம் மூலம் தீவிர கண்காணிப்பு!
04:40திருச்சியில் ஆரோக்கிய உணவு வீதி தொடக்கம் ! ஸ்மார்ட் கார்டு வசதியுடன் தள்ளுவண்டி கடைகள் திறப்பு!
03:16தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில்... மதுரையில் வீதிகளை ஆக்கிரமித்த ஷாப்பிங் பிரியர்கள்!
06:49மதுரையில் அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் சரமாரி கேள்வி! அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு!
09:52சீர்குலைந்த சட்டம் ஒழுங்கு... பெண்கள் பாதுகாப்பு எங்கே? தவெக அரசை கடுமையாக தாக்கிய எம்பி கனிமொழி!
09:38சென்னையில் திமுக எம்பி கனிமொழி தலைமையில் பிரம்மாண்ட போராட்டம்! தவெக அரசுக்கு எதிராக முழக்கம்!
03:10திருவாரூர் மாவட்டத்தில் கடும் பனிமூட்டம்..... திருவாரூர் மாவட்டத்தை சூழ்ந்த பனிப் போர்வை !