Jan 16, 2024, 11:15 AM IST
Madurai Palamedu Jallikattu | உலகப்புகழ்பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு இன்று காலை 7 மணிக்கு கோலாகலமாக தொடங்கியது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 1000 காளைகளுக்கும் 700 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர். போட்டி தொடங்குவதற்கு முன்னதாக மாடுகளுக்கும், மாடுபிடி வீரர்களுக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதன்படி இன்று காலை 7 மணியளவில் பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் சங்கீதா தலைமையில் உறுதிமொழி ஏற்புடன் இந்த போட்டி தொடங்கியது. இந்த போட்டியை காண ஏராளமானோர் குவிந்துள்ளதால் பாலமேடு விழாக்காலம் பூண்டுள்ளது. ஒரு மணி நேரத்திற்கு ஒரு சுற்று என மாலை 5 மணி வரை இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. பாலமேடு ஜல்லிக்கட்டு போட்டியை ஒட்டி அங்கு 2,500 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அசம்பாவிதங்களை தடுக்க சிசிடிவி உதவியுடன் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.