
நான்கரை ஆண்டுகளில் 20 லட்சம் பேருக்கு வீட்டு மனை பட்டாவை தமிழக அரசு வழங்கி உள்ளது. பட்டா என்பது உங்களது உரிமை. பட்டா இருக்கும் ஆனால் வீடு இருக்காது. நடுத்தர மக்களுக்கு ஏக்கமாக இருக்கும். அந்த ஏக்கத்தை போக்கும் வகையில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. தான்யாக்கள், பிரேமாக்கள் முகத்தில் மகிழ்ச்சியை கொண்டு வர கூடிய ஆட்சி தான் முதல்வர் ஆட்சி. சாப்ட்வேர் வேலை செய்தால் மட்டும் தான் ஐடி கார்டா. சாதிக்க வேண்டும் என்கிற எங்களுக்கு ஐடி கார்டு இல்லையா என மகளிர் குழு சகோதரிகள் கேட்டனர்