
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ரஜினிகாந்த், காஷ்மீர் தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தார். மேலும், தீவிரவாத செயல்களில் ஈடுபட்டோரையும் அதற்குப் பின்னணியில் இருந்தவர்களையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறினார். மேலும் கூறுகையில், "காஷ்மீரில் இயற்கை அழகும் அமைதியும் திரும்பியுள்ளது எதிரிகளுக்குப் பிடிக்கவில்லை. அதை எப்படியாவது கெடுக்க வேண்டும் என்பதற்காக இதுபோல செய்கிறார்கள். நிச்சயம் இதைச் செய்தவர்களையும் அதற்குப் பின்னால் இருப்பவர்களையும் சீக்கிரம் கண்டுபிடிக்க வேண்டும். இந்தத் தீவிரவாதிகளுக்குக் கடுமையான தண்டனை தர வேண்டும்.