Mar 24, 2024, 5:59 PM IST
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த விஜய் வசந்த், எதிர்க்கட்சியினர் என்ன விமர்சனம் வைத்தாலும், என்ன வாக்குறுதி கொடுத்தாலும், இந்திய கூட்டணி தமிழகத்தில் 40க்கு 40 இடங்களில் வெற்றி பெறும். அதே நேரத்தில் கன்னியாகுமரியில் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம் என கூறினார்.
எங்கள் கட்சியில் இருந்து யார் வெளியே சென்றாலும், எந்த பாதிப்பும் கிடையாது. விளவங்கோடில் மக்கள் நல்லது செய்வதற்கு மற்றொரு நபருக்கு வாய்ப்பு கிடைத்திருக்கிறது. அதில் காங்கிரசைச் சார்ந்த நபர்கள் விலவங்கோடு மக்களுக்கு மீண்டும் நல்லதை செய்வார்கள். மீனவர்கள் பிரச்சனைகள் சம்பந்தமாக செய்தியாளர் கேள்விக்கு, அதிகாரிகள் மற்றும் அமைச்சர் அவர்களையும் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவர்களிடம் பேசிக் கொண்டிருக்கிறோம்.
இதற்கு முக்கிய முடிவு கிடைக்கும் என நம்புகிறோம் என கூறினார். வேட்பாளர்கள் குறித்த விமர்சனங்கள் வந்து கொண்டே இருக்கிறது. இருப்பது ஒன்பது தொகுதி அதில் பல்வேறு கருத்துக்கள் வந்து கொண்டிருக்கிறது. குறிப்பாக காங்கிரஸ் பொருத்தவரையில் வெற்றி வேட்பாளரை தேர்வு செய்து கொடுக்கப்படும் மக்கள் அனைவரும் காங்கிரசிற்கு பேர் ஆதரவு தந்து கொண்டிருக்கிறார்கள்.
தமிழக முதல்வர் ஸ்டாலின் தற்போது கேப்டனாக செயல்பட்டு தொடர்ந்து 4 தொகுதிகளும் பாண்டிச்சேரி உட்பட நாற்பது தொகுதிகளிலும் மாபெரும் வெற்றி அடைய இருப்பதாக கூறினார். வரும் 27ஆம் தேதி கன்னியாகுமரி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக விஜய் வசந்த் கூறினார். கடந்த முறை இடைத்தேர்தலாக இருந்தது, 2019ல் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றேன். இந்த முறை 3 லட்சத்திற்கும் அதிகமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என கூறினார்.
தனது தந்தை கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றிக் கொண்டிருக்கும்போதே அவர் மறைந்ததை அடுத்து 2019ல் எனக்கு வாய்ப்பு கொடுத்தார்கள். கொரோனா தாக்கம் காரணமாக எந்த பணிகளும் செய்ய முடியவில்லை. கடந்த இரண்டு ஆண்டுகளில் பல்வேறு பணிகளை செய்து முடித்துள்ளேன். மீண்டும் வாய்ப்பு கொடுக்கும் பட்சத்தில் அப்பாவிற்குக்குரிய வாக்குறுதிகள் மற்றும் மேலும் பல்வேறு நலத்திட்டங்களை செய்வதாகவும் அவர் கூறினார். முன்னாள் ஆளுநர் தமிழிசை வெற்றி வாய்ப்பு குறித்து கேட்டபோது அதை அவரிடம் தான் கேட்க வேண்டும் என்று கூறினார்.