முதலாக இந்தியை திணிக்கும் போது தமிழ் நாட்டில் தான் கிளர்ச்சி வந்தது. மும்மொழி என்பது ஏற்புடைதல்ல. தாய் மொழி, வழி பாட்டு மொழியாக ஆங்கிலம் உள்ளது. அதுவே போதுமானது. இந்தி மட்டும் அல்ல ஜெர்மன், பிரஞ்ச், உள்பட எந்த மொழி வேண்டுமானாலும் கற்று கொள்ளலாம். ஜெர்மன் பல மானிலங்களில் 2வது மொழியாக உள்ளது. தேவை என்றால் கற்று கொள்ளலாம். கட்டாயம் என்பது நாட்டின் இறையாண்மைக்கும் ஒருமைப்பாட்டிற்கும் பாதுகாப்பாக இருக்காது. இந்தியை திணிக்கும் போது போரிட்டோம். ஆட்சிக்கு வந்த பின் யார் இந்தியை திணித்தார்களோ அவர்களுடன் கூட்டணி வைத்தால் எந்த எதிர்ப்பும் இல்லாமல் இந்தி வந்து விட்டது என்று சீமான் பேட்டி !