
திருவாரூர் ,திருத்துறைப்பூண்டி , முத்துப்பேட்டை, நன்னிலம், குடவாசல்,உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது , இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது , இதில் சராசரியாக 2. 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது, இதில் திருத்துறைப்பூண்டி நகர் பகுதியில் உள்ள வானகார தெருவில் மழைநீர் 15 க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது , இதனால் அப்பகுதிமக்கள் அவதி அடைந்துள்ளனர் , மேலும் தண்ணீரை வடிவமைக்கும் பணிகள் நகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.