நெல்லையில் மறைந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. கருப்பசாமி பாண்டியன் உடலுக்கு எடப்பாடி பழனிசாமி நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார். பாளையங்கோட்டை அடுத்த திருத்து பகுதியில் அவருடைய இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு எடப்பாடி பழனிச்சாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் நேரில் சென்று மலர்மாலை வைத்து அஞ்சலி செலுத்தினர். கருப்பாசாமி பாண்டியன் உடல் திருத்து கிராமத்தில் இன்று அடக்கம் செய்யப்படுகிறது.