15 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த மீன்பிடித் திருவிழா.. பெரிய, பெரிய மீன்களை பிடித்து மகிழ்ந்த மக்கள்..

Sep 25, 2022, 1:27 PM IST

திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கள்ளிப்பட்டியில் இன்று 15 ஆண்டுகளுக்கு பிறகு மீன்பிடித்திருவிழா நடைபெற்றது. குளத்தில் நீரின் அளவு குறைந்துள்ளதால், கிராம மக்கள் சார்பில் தற்போது மீன்பிடித் திருவிழா நடத்த     முடிவு செய்யபட்டது. 

அதன்படி இன்று அதிகாலை மீன்பிடித் திருவிழா தொடங்கியது. இதில் மணப்பாறை சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர் மற்றும் கரூர், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் என நூற்றுக்கணக்கானோர் கலந்துக்கொண்டனர். இதில் மக்கள் போட்டி போட்டுக் கொண்டு வலைகளுடன் குளத்தில் இறங்கி மீன் பிடித்து மகிழ்ந்தனர். 

மேலும் படிக்க:மதுரையில் 8 வயது சிறுமி மர்மமான முறையில் உயிரிழப்பு; தலைமறைவான தந்தையை தேடும் போலீசார்!!

கெண்டை, கெளுத்தி, கட்லா, ஜிலேபி உள்ளிட்ட மீன்கள் ஏராளமாக சிக்கின. சுமார் 2 கிலோவில் இருந்து 5 கிலோ எடையுள்ள பெரிய மீன்களும் பிடிப்பட்டன.