Velmurugan s | Published: Apr 2, 2025, 2:01 PM IST
திருவண்ணாமலையில் போதை ஊசி மறுத்த இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார். திமுக அரசு போதைப்பொருளை ஒழிக்க தவறிவிட்டதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதலே நான் தொடர்ச்சியாக போதைப்பொருள் புழக்கம் குறித்து எச்சரித்து வருகிறேன்.ஆனால், இன்றைய நாள் வரை போதைப்பொருளை ஒழிக்க இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு, ஆபரேஷன் 2.ஓ, 3.ஓ, 4.ஓ என ஓ போட்டதை தவிர ஆக்கப்பூர்வமாக ஒரு துரும்பைக் கூட கிள்ளிப் போடவில்லை என்பதையே இதுபோன்ற செய்திகள் உணர்த்துகின்றன என்று கூறியுள்ளார்.