இரண்டு கோடி அண்ணா திமுக தொண்டர்களின் சொத்து தலைமை கழகக் அலுவலகம்.அந்த சொத்தை ரவுடிகளை கொண்டு சென்று அடித்து நொறுக்கி, திமுக உதவியுடன் சீல் வைத்தவர் ஓ.பன்னீர்செல்வம். இது துரோகம் இல்லையா? எங்களை விட்டு போகாதீர்கள் என்று எவ்வளவோ கேட்டுக் கொண்டோம்.நீங்களாக போனீர்கள். அம்மாவிற்கு விசுவாசம் விசுவாசம் என்று கூறிக்கொண்டு, 89ல் புரட்சித்தலைவி அம்மா அவர்கள் போடி தொகுதியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது நீங்கள் யாருக்கு வேலை செய்தீர்கள்? வெண்ணிறாடை நிர்மலாவுக்கு வேலை செய்தார். இவரா அம்மாவிற்கு விசுவாசமாக இருந்தவர்?அதே சேவல் சின்னத்தில் 89 ல் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றவன் நான் என்று எடப்பாடி பழனிசாமி பேசினார் .