
அண்ணா அறிவாலயத்தில் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுக்கு தனியறை அளிக்கப்பட்டதை போல், தற்போது கனிமொழிக்கும் தனியறை அளிக்கப்பட்டிருக்கிறது. அண்ணா அறிவாலயத்தில் ஒதுக்கப்பட்டுள்ள அலுலக அறையில் கனிமொழியை முதல்வர் ஸ்டாலின் அமர வைத்துள்ளார். இதன் காரணமாக திமுகவில் கனிமொழிக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளதாக பார்க்கப்படுகிறது.