மதிமுக கட்சி, கட்சி தலைவர், கட்சி கொடி ஆகியவற்றிற்கு அவமானத்தை ஏற்படுத்தியதாக கூறி மல்லை சத்தியா, நாஞ்சில் சம்பத், பஷீர் உள்ளிட்ட நான்கு பேர் மீது மதிமுக வழக்கறிஞர்கள் பிரிவினர் சென்னை டிஜிபி அலுவலகத்தில் புகார் . மதிமுக குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு மற்றும் சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிடுவோர் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கூறி மதிமுக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகிகள் சென்னை காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். மதிமுக மாநில சட்டத்துறை செயலாளர் அரசு அமல்ராஜ், சூரி நந்தகோபால், தலைமை கழக வழக்கறிஞர் சுப்பாராஜ் சட்டத்துறை துணைச் செயலாளர் வினோத்குமார், வழக்கறிஞர் செந்தில் செல்வன், மதிமுக சைதை மாவட்ட செயலாளர் சுப்ரமணி ஆகியோர் புகார் மனுவை டிஜிபி அலுவலகத்தில் அளித்தனர்.