பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களின் நடனத்தை பார்த்து கதறி அழுத நீலகிரி ஆட்சியர்

பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியவர்களின் நடனத்தை பார்த்து கதறி அழுத நீலகிரி ஆட்சியர்

Published : Oct 11, 2023, 11:56 AM IST

நீலகிரியில் முதியோர் இல்லம் ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற மாவட்ட ஆட்சியர் முதியவர்கள் நடனமாடியதை பார்த்து தேம்பி அழுத சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

நீலகிரி மாவட்டம் கூடலூரில் இயங்கி வரும் ஸ்ரீ ராமகிருஷ்ணா முதியோர் இல்லத்திற்கு நீலகிரி மாவட்ட ஆட்சியர்  அமுதா நேற்று வருகை புரிந்துள்ளார். நூறு வயதிற்கு மேற்பட்ட முதியோர்களை பார்வையிட்டு ஆட்சியர் புத்தாடை வழங்கி சிறப்பித்தார். பின்னர் அனைவரிடமும் ஆசியும் பெற்றார். 

இதனைத் தொடர்ந்து முதியோர் இல்லத்தில் ஆசைப்பட்ட எல்லாத்தையும் காசிருந்தா வாங்கலாம் அம்மாவை வாங்க முடியுமா என்ற பாடலுக்கு முதியவர்கள் நடனம் ஆடினர். இதனை பார்த்துக் கொண்டிருந்த மாவட்ட ஆட்சியர் ஒரு கட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டு தேம்பி அழுதார்.

இதனைத் தொடர்ந்து முதியவர்கள் கூறுகையில், எங்கள் வீட்டில் இருந்தால் இதுபோன்ற சந்தோசங்கள் கிடைக்குமா இல்லையா என்று தெரியவில்லை. ஆனால் இங்கு நாங்கள் சுதந்திரமாகவும், எங்கள் விருப்பப்படி சந்தோஷமாக வாழ்கின்றோம் எனறும், எங்களை தேடி ஆட்சியர் வந்ததற்கு மனமார்ந்த நன்றியை தெரிவிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

03:43தமிழகம் இந்தியாவிலேயே முதன்மை மாநிலமாக விளங்கி வருகிறது...! அமைச்சர் கீதா ஜீவன் பேச்சு
05:51மக்களுக்கு தெரியாமல் அரசு மதுபான கடை அரசுக்கு எச்சரிக்கை பொதுமக்கள் போராட்டம்
05:292026 இல் தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி வெற்றிபெறும் - வானதி சீனிவாசன் பேட்டி
04:29உங்களுடன் ஸ்டாலின் திட்டம் இதுவரை பத்தாயிரம் முகாம்களில் நடத்தப்பட்டிருக்கிறது - மா சுப்பிரமணியன் !
04:19ஜனநாயகன் திரைப்படத்தை வெளியிடுவதற்கு எல்லா உரிமையும் உள்ளது ! வைகோ பேட்டி.
03:10பராசக்தி திரைப்படம் தொடர்பான கேள்விக்கு விமர்சனமாக பதிலளித்தார் நயினார் நாகேந்திரன்
02:1741 பேர் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்காக நடிகர் விஜய் டெல்லி புறப்பட்டார்..
04:54பாஜக அரசு எவ்வளவு பூச்சாண்டி காட்டினாலும் தமிழ்நாட்டில் ஒன்றும் நடக்காது ! கி. வீரமணி அதிரடி பேச்சு
06:353000 பொங்கல் பரிசு திமுக கட்சி நிதி அல்ல? ....மக்களின் வரி பணம் ! ஆர்.பி .உதயகுமார் குற்றச்சாட்டு
03:55ஜனநாயகன் திரைப்படம் நெருக்கடிக்கு அரசியல் காரணம் இல்லை ! நடிகர் சரத்குமார் பேட்டி