பெண் செய்தியாளர் ஒருவர் சின்மயிடம் வைரமுத்து குறித்து கேள்வி எழுப்பியதும், கடும் கோபமடைந்த சின்மயி,இப்ப எதற்கு அவரை பத்தி என்னிடம் கேள்வி கேட்டீங்க. என்கிட்ட வைரமுத்து குறித்து தான் பேச வேண்டுமா. இந்த கேள்வி மூலமா என்னை ட்ரிக்கர் செய்து நான் கோபமடைந்து பதில் தரணும் அதைத்தான் எதிர்பாக்குறீங்க. நீங்களும் ஒரு பெண்தான், நீங்களே இப்படி கேள்வி கேட்பது எனக்கு அதிர்ச்சியாக இருக்கு. வைரமுத்து குறித்து என்னிடம் கேட்காதீர்கள் என பதில் அளித்தார்.