
அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவர்கள் குழந்தை நன்றாக உள்ளது என்று கூறி திடீரென நேற்று காலை குழந்தையின் உடலுக்கு ஆபத்து உள்ளது எனவே தர்மபுரிக்கு செல்லுங்கள் என மேல் சிகிச்சைக்காக மருத்துவர்கள் அனுப்பி வைத்துள்ளனர். பின்னர் கர்ப்பிணி தனலட்சுமி தர்மபுரி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்பு பரிசோதனை செய்த மருத்துவர்கள் குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக கூறி அறுவை சிகிச்சையின் மூலம் பெண் குழந்தையை மீட்டு உள்ளனர். இதனால் பெண் குழந்தை உயிரிழந்த நிலையில் உறவினர்களிடம் குழந்தையை தர்மபுரி மருதவர்கள் ஒப்படைத்துள்ளனர்.