Velmurugan s | Published: Apr 12, 2025, 7:00 PM IST
அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இப்போதே அரசியல் களம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் எந்த காலத்திலும் பாஜகவுடன் கூட்டணி கிடையாது என்று 2024 மக்களவை தேர்தலுக்கு முன்பாக எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். ஆனால், மீண்டும் பாஜகவுடன் அதிமுக கைகோர்க்க உள்ளதாகவும் சில நிபந்தனைகள் இபிஎஸ் வைத்ததாகவும் தகவல் வெளியானது. பாஜகவுடன் அதிமுக கூட்டணி அமைவதை அமித்ஷா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இந்நிலையில் பிரதமர் மோடி பாஜக - அதிமுக கூட்டணி இணைந்தது மகிழ்ச்சி..தமிழகத்தில் மீண்டும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆட்சி என்று புகழ்ந்துள்ளார் .