Velmurugan s | Published: Apr 1, 2025, 6:00 PM IST
பாஜக ,அதிமுக இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைப்பது ஏறக்குறைய உறுதியாகியுள்ள நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எதிர்ப்பார் என்ற கருத்து நிலவியது. அதிமுகவுடன் கூட்டணி அமைத்தால் தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என்று முன்பு அறிவித்து இருந்தார். எனவே தனது கருத்தையும் மேலிடத்தில் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.ஆனால் பாஜக தேசிய தலைமையோ ஒருங்கிணைந்த அதிமுகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்புகிறது. எனவே தமிழக பாஜக தலைவராக உள்ள அண்ணாமலைக்கு பதிலாக தமிழிசை அல்லது நயினார் நாகேந்திரனை தலைவர் பதவியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.