
தமிழகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பை நடத்தாமல் இருப்பது தமிழகத்து செய்யும் மிக பெரிய துரோகம் என தெரிவித்த அவர், நீதிமன்றங்கள் அனுமதி அளித்தும் முதல்வர் ஸ்டாலின் அதை செய்யாமல் இருக்கின்றார் எனவும் கூட்டணி கட்சிகள் இது குறித்து கேள்வி எழுப்பவில்லை எனவும் தெரிவித்தார். வைகோ ஏன் இது குறித்து அழுத்தம் கொடுக்க வில்லை, திருமா ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை என கேள்வி எழுப்பிய அவர், சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தினால் பட்டியலின மக்களுக்கு 22 சதவீதம் வரை இட ஒதுக்கீடு உயரும், இது தெரிந்தும் ஏன் திருமா மௌனமாக இருக்கின்றார், சீட்டுக்காகவா ? எனவும் கேள்வி எழுப்பினார்.