மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஜீவசமாதியில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் ஜீவசமாதியில் மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி

Published : Oct 28, 2023, 10:30 AM ISTUpdated : Oct 28, 2023, 10:31 AM IST

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் அமைக்கப்பட்டுள்ள பங்காரு அடிகளார் ஜீவசமாதிக்கு தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.

செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் அமைந்துள்ள ஆதிபராசக்தி சித்தர் பீடத்தின் நிறுவனரும், ஆன்மீக குருவுமான பங்காரு அடிகளார் கடந்த 21ம் தேதி உடல் நல குறைவால் காலமானார். அவரது உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், பிரபலங்கள் உள்ளிட்டோர், அவரது பூத உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். தற்பொழுது பங்காரு அடிகளாரின் ஜீவசமாதி கோவில் கருவறை அருகே குரு மண்டபத்தில், அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 10 நாட்களாக தொடர்ந்து பல்வேறு பிரபலங்கள் பங்காரு அடிகளார் ஜீவசமாதிக்கு வந்து வழிபட்டு செய்து வருகின்றனர். இந்த நிலையில் இன்று தமிழக எதிர்க்கட்சித் தலைவரும், முன்னாள் முதலமைச்சரான எடப்பாடி  பழனிசாமி ஜீவ சமாதிக்கு சென்று மரியாதை செய்து வழிபட்டார். இதனை அடுத்து கோவில் வளாகத்திற்குள் பஞ்ச தீபம் ஏற்றினார். 

இதனையடுத்து அடிகளார் இல்லம் சென்ற எடப்பாடி பழனிச்சாமி பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார் மற்றும் அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். எடப்பாடி வருகை முன்னிட்டு ஏராளமான அதிமுகவினர் கோவில் வளாகத்திற்குள் கூடியிருந்தனர்.

02:01வாக்காளர் பட்டியல் வெளியீடு, 6.5 லட்சம் பேர் நீக்கம் மொத்தம் 32,25,198 வாக்காளர்கள்
04:07களத்திற்கே வராத விஜய் களம் குறித்து பேசுவது நகைச்சுவையாக உள்ளது - சீமான் பேட்டி
05:20பூரண சந்திர தீக்குளித்து உயிரிழந்துள்ளார், இதுக்கு முழுக்க முழுக்க காரணம் திமுக தான்
06:37இந்தியாவிலேயே அரசு மருத்துவமனைகளில் எங்கேயும் இல்லாத கருவியாக இங்கே நிறுவப்பட்டது - மா. சுப்ரமணியன்
03:21பட்டம் சரியான நபர்களுக்கு தான் கொடுக்கப்படுகிறதா ?அல்லது கொடுப்பவர் யார் ? வாங்குவது யார் ?
07:12திமுக ஒரு தீய சக்தி..! ஆட்டையை போடும் திமுக அரசு வெறிகொண்டு கத்திய விஜய்..
06:10தொண்டரை கண்டித்த தவெக தலைவர் விஜய்.. மக்களுக்கு ஒண்ணுன்னா இந்த விஜய் வந்து நிப்பான்
05:14திமுகவின் வாக்குகள் எல்லாம் திமுகவிற்கே போகும் என்று நினைக்காதீர்கள் ! வானதி சீனிவாசன் பேட்டி
04:32திராவிட முன்னேற்றக் கழகம் எடுக்கும் முடிவுகளுக்கு நாங்கள் முழு ஒத்துழைப்பு கொடுப்போம்! வைகோ பேச்சு
02:50செங்கோட்டையன் பாஜகவின் ஸ்லீப்பர்செல், களத்தில் எங்களை எதிர்த்து நிற்பவர்கள் எதிரிகள் - ரகுபதி பேட்டி
Read more