Jan 22, 2025, 1:54 PM IST
தந்தை பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ளார். அதாவது சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான்: பெரியார் சொன்னதை எடுத்துச் செல்கிறோம். அதில் என்ன தவறு இருக்கிறது. பெரியார் குறித்த எனது கருத்துக்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டால் அங்கு பதில் அளிக்க தயாராக இருக்கிறேன். பெரியாரா, பிரபாகரனா என்று மோதி பார்க்க வேண்டியதுதான்.
ஒவ்வொரு தேர்தலிலும், பெண்கள் தாலியையும் கர்ப்பப் பையையும் அறுத்தெறிய வேண்டும் என்று பெரியார் கூறினார் என்று பேசி ஓட்டு கேளுங்கள். அருள்மொழி, கனிமொழி, சுந்தரவள்ளி ஆகியோர் ஏன் கர்ப்பபையை அறுத்தெறியவில்லை? நீங்கள் ஏன் பெரியார் கருத்தை பின்பற்றவில்லை? பெரியார்தான் யாரை படிக்க வைத்தாரா? எங்களை படிக்க வைத்தது காமராஜர். குடிக்க வைத்தது திராவிட ஆட்சி என சீமான் விமர்சித்துள்ளார்.