தொழிலதிபரின் மனைவி மற்றும் பிள்ளைகள் கோவையில் வசித்து வருகின்றனர்.ஒவ்வொரு வாரமும் இவர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க கோவை வந்து செல்வது வழக்கம்.இவரது செல்போன் எண்ணுக்கு போட்டிம் என்ற இன்டர்நேஷனல் ஆப் மூலம் கடந்த மாதம் அழைப்பு ஒன்று வந்துள்ளது. அதில் பேசிய மர்ம நபர் தொழிலதிபர் தனது மனைவி பிள்ளைகளை பார்க்க கோவைக்கு வரக்கூடாது என்றும் வந்தால் கொலை செய்து விடுவேன் என்று மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் சென்னைக்கு வந்து கொலை செய்து விடவும் தயங்க மாட்டேன் என்று அந்த நபர் மிரட்டியுள்ளார் .இதனால் அதிர்ச்சி அடைந்த தொழிலதிபர் அழைப்பு வந்த எண் குறித்து விசாரணை நடத்தினார். பிறகு கோவையில் உள்ள தனது மனைவி மற்றும் பிள்ளைகள் குறித்து தனக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்த போது போட்டிம் ஆப் மூலம் அழைப்பு விடுத்து மிரட்டியது கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஸ்வீட்சன் என்ற வாலிபர் என்பது தெரிய வந்தது. தொடர்ந்து சென்னை தொழில் அதிபர் போலீசில் புகார் அளித்தார்.