Sep 16, 2023, 12:34 PM IST
முன்னாள் முதல்வர் கலைஞர் பெயரில் உருவாக்கப்பட்டுள்ள, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்றைய தினம் தொடங்கி வைத்தார். இதனால் உரிமைத் தொகையை பெற்றுக் கொண்ட குடும்ப பெண்கள் பலரும் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளனர்.
அந்த வகையில் சென்னை மெரினா கடற்கரையில் உள்ள பெண்கள் பலரும் உரிமைத் தொகையை பெற்றுக் கொண்டு தங்களது கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.