குவாட்டருக்கு 10 ரூபா கூட தான் விற்பேன்; டாஸ்மாக் சூப்பர்வைசர் அராஜகம்

குவாட்டருக்கு 10 ரூபா கூட தான் விற்பேன்; டாஸ்மாக் சூப்பர்வைசர் அராஜகம்

Published : Oct 12, 2022, 12:13 AM IST

மதுபாட்டில் ஒன்றுக்கு 10 ரூபாய் அதிகம் விற்கப்படுவது குறித்து மதுபிரியர் எழுப்பிய கேள்விக்கு தமிழ்நாடு முழுவதும் இப்படித்தான் விற்கப்படுவதாகவும் அதனால் தானும் அப்படித்தான் விற்பேன் என்று கடையில் டாஸ்மாக் கடை சூப்பர்வைசர் பேசிய வீடியோ வைரலாகி வருகிறது. 
 

டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்க கூடாது என்பது தமிழக அரசின் விதி, ஆனால் சென்னையை அடுத்த குன்றத்தூர் ஆண்டால்குப்பத்தில் செயல்பட்டு வரும் டாஸ்மாக் கடையில், குவாட்டர் மது பாட்டிலுக்கு 10 ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்யப்படுவதாக கூறப்படுகிறது. ஆனால் மது பிரியர் ஒருவர் தன்னால் 10 ரூபாய் கூடுதலாக கொடுக்க முடியாது என்றும் அரசு நிர்ணயித்த விலைக்கே மது பாட்டிலை தனக்கு வழங்க வேண்டும் எனவும் கடையின் சூப்பர்வைசரிடம் கேட்டுள்ளார். ஆனால் அதற்கு மது வாங்க வந்தவரை வசைபாடிய டாஸ்மாக் கடையின் சூப்பர்வைசர், தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலைக்கு தான் விற்பனை செய்யப்படுவதாகவும், அதனால் தானும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்வதாகவும் தெரிவித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது. குன்றத்தூர் ஆண்டால்குப்பத்தில்  செயல்பட்டு வரும் அந்த குறிப்பிட்ட டாஸ்மாக் கடையில் மட்டும் நாள் ஒன்றுக்கு சுமார் ஆயிரத்து 500 மது பாட்டில்கள் விற்கப்படுவதாகவும், இதன் மூலம் டாஸ்மாக்  சூப்பர்வைசர் ஜெயகுமார் மற்றும் கடையின் ஊழியர்கள் நாள் ஒன்றுக்கு 15 ஆயிரம் ரூபாய் வரை முறைகேடாக வருமானம் ஈட்டுவதாகவும் கூறப்படுகிறது.
 

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more