சென்னையில் அரசுப்பேருந்தின் மேல் ஏறி கல்லூரி மாணவர்கள் ரகளை; பொதுமக்கள் அவதி

Jul 22, 2023, 8:19 PM IST

தமிழகத்தின் தலைநகரான சென்னையில் பஸ்டே என்ற பெயரில் பேருந்துகளை சிறை பிடித்து அலங்கறித்து ஊர்வலமாக சென்று பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் கலாசாரத்திற்கு தடை விதிக்கப்பட்டதால் தற்போது பஸ் டே போன்ற நிகழ்வுகள் குறைந்துள்ளன. 

இருப்பினும் ஒரே வழித்தடத்தில் பயணம் செய்யும் குறிப்பிட்ட சில மாணவர்கள் ரூட்டு தல என்ற பெயரில் ஒரு குழுவை உருவாக்கி பேருந்தே அவர்களுக்கு தான் சொந்தம் எனும் தொணியில் செயல்படுவதால் சக பயணிகள் அச்சத்துடன் பயணிக்கும் நிலையே நீடிக்கிறது. 

இந்நிலையில் திருவொற்றியூர் நெடுஞ்சாலையில் கல்லூரி மாணவர்கள் சிலர் பேருந்தின் மேற்கூரையில் அமர்ந்து கொண்டு ரகளையில் ஈடுபட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளானார்கள். இந்நிலையில், இதுபோன்ற அத்துமீறல்களில் ஈடுபடும் நபர்கள் மீது காவல் துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.