சென்னையில் மாடு முட்டியதில் சாலையில் நடந்து சென்ற முதியவர் படுகாயம்

சென்னையில் மாடு முட்டியதில் சாலையில் நடந்து சென்ற முதியவர் படுகாயம்

Published : Oct 18, 2023, 07:16 PM IST

சென்னை பார்த்தசாரதி கோவில் அருகே சாலையில் நடந்து சென்ற முதியவரை மாடு முட்டியதில் அவர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவில் அருகே முதியவர் ஒருவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கே சில பசு மாடுகள் நின்று கொண்டிருந்தன. அதில் திடீரென ஆக்ரோஷமான மாடு ஒன்று முதியவரை பலமாக மோதி தூக்கி வீசியது.

இதில் அந்த முதியவர் படுகாயமடைந்து கீழே விழுந்தார். இதனைத் தொடர்ந்து அப்பகுதியில் இருந்தவர்கள் முதியவரை மீட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்நிலையில், முதியவரை மாடு முட்டும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

அண்மையில் இதே போன்று சென்னையில் தெருவில் திரிந்துகொண்டிருந்த மாடு முட்டி சிறுமி படுகாயமடைந்ததைத் தொடர்ந்து தெருக்களில் உலாவும் மாடுகள் பறிமுதல் செய்யப்படும் என்றும், அதன் உரிமையாளர்களிடம் அபராதம் வசூலிக்கப்படும் என்றும் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் அதே போன்ற சம்பவம் நடைபெற்றுள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more