vuukle one pixel image

நீதிக்கு புறம்பாக யார் செயல்பட்டாலும் விஸ்வரூபம் எடுப்பேன் - ஓ.பன்னீர்செல்வம்

Mar 22, 2024, 7:35 PM IST

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இன்று மதுரையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், “ராமநாதபுரம் தொகுதி ராஜா சேதுபதி மன்னர் ஆட்சிக்கு உட்பட்டது. அங்கு வாழும் மக்கள் நீதியின் படி, தர்மத்தின் படி நீதி வழங்குவார்கள் என்பது தான் கடந்த காலங்களின் வரலாறு. இன்றைக்கும் அதிமுக தொண்டர்களின் உரிமைகளை மீட்கும் தர்ம யுத்தத்தில் ஈடுபட்டுள்ள நான், நீதி கேட்டு தான் போட்டியிடுகிறேன்.

அந்த நீதிக்கு உரிய தீர்ப்பை வழங்கும் மக்கள் ராமநாதபுரம் தொகுதி மக்கள் என எண்ணித்தான் நான் அந்த தொகுதியில் போட்டியிடுகிறேன். நீதிக்கு புறம்பாக யாரெல்லாம் செயல்படுகிறார்களோ அவர்களுக்கு எதிராக விஸ்வரூபம் எடுப்பேன். ஒவ்வொரு அரசியல் கட்சியும் தங்கள் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் கட்சி மற்றும் மக்கள் நலன் கருதி தேர்தல் வாக்குறுதியாக அறிவிப்பு வெளியிடுவார்கள் என்றார்.