Dec 12, 2024, 7:02 PM IST
தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் பரவாலாக பெய்த நிலையில், நேற்று முதல் மழை மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. தலைநகர் சென்னையில் நேற்று மாலை முதல் அவ்வப்போது பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதரமாக திகழும் பூண்டி சத்தியமூர்த்தி ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 1,000 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. தொடர் மழை கொட்டி வருவதால் சென்னையின் முக்கியமான குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியிலும் தண்ணீர் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது.