தேமுதிக தலைவர் விஜயகாந்தின் உடலுக்கு ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.
சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை கோயம்பேடில் உள்ள கட்சி தலைமை அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளது.
விஜயகாந்தின் உடலுக்கு ஆயிரக்கணக்கான தொண்டர்கள் வரிசையில் நின்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இந்நிலையில், தெலங்கானா ஆளுநரும், புதுச்சேரி துணைநிலை ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் விஜயகாந்தின் உடலுக்கு நேரில் வந்து அஞ்சலி செலுத்தினார்.