போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்

போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்

Published : Jul 19, 2024, 07:19 PM IST

சென்னை எழும்பூர் நீதிமன்ற வளாகத்தில் வழக்கறிஞர்கள் இருவர் இடையே ஏற்பட்ட மோதலால் இரு பிரிவினர் கடுமையாக மோதிக் கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை எழும்பூர் நீதிமன்றம் வழக்கம் போல் இன்றும் பரபரப்பாக இயங்கிக் கொண்டு இருந்தது. அப்போது பகல் 1.15 மணியளவில் வழக்கு ஒன்றை மற்றொரு வழக்கறிஞரிடம் ஒப்படைப்பது தொடர்பான பேச்சுவார்த்தையில் வழக்கறிஞர்கள் இருவர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

வாக்குவாதம் முற்றிய நிலையில், வழக்கறிஞர்கள் குழுக்களாக பிரிந்து கடுமையாக மோதிக் கொண்டனர். நாற்காலிகள், கற்களைக் கொண்டு வழக்கறிஞர்கள் கடுமையாக தாக்கிக் கொண்டதால் நீதிமன்ற வளாகமே போர்க்களம் போல் காட்சி அளித்தது.

மோதல் தொடர்பாக தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த எழும்பூர் காவல் உதவி ஆணையாளர் தலைமையில் போலீசார் மோதலில் ஈடுபட்டவர்களை சமாதானப்படுத்தினர். மோதல் காரணமாக 5 வழக்கறிஞர்கள் காயமடைந்து ராயபேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மோதல் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more