கேப்டன் விஜயகாந்துக்காக மதுரையில் மொட்டையடித்த தொண்டர்கள்

Dec 28, 2023, 4:06 PM IST

தேமுதிக தலைவரும், தமிழ சட்டமன்ற முன்னாள் எதிர்க்கட்சித் தலைவருமான விஜயகாந்த் இன்று காலமானார். விஜயகாந்தின் மறைவு அவரது தொண்டர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், மதுரை மாவட்டம் அவனியாபுரம் பகுதியில் தேமுதிக தொண்டர்கள் சிலர் விஜயகாந்தின் மறைவுக்காக மொட்டை அடித்தும், ஒப்பாரி பாடியும் தங்கள் சோகத்தை வெளிப்படுத்தினர்.