Sep 22, 2022, 10:53 AM IST
திருப்பெரும்புதூர் அடுத்த தண்டலம், கீவளூர் பகுதியை சேர்ந்தவர் இருசப்பன். இவரது மகன் சஞ்சய்(17), அதே பகுதியில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இவரது நண்பர் நேதாஜி(17), இன்று இருவரும் வீட்டிலிருந்து பொழிச்சலூரில் உள்ள தங்களது உறவினர் வீட்டிற்கு செல்வதற்காக மொபெட்டில் சென்று கொண்டிருந்தனர். குன்றத்தூர் - திருப்பெரும்புதூர் சாலை கலடிபேட்டை அருகே சென்றபோது முன்னாள் சென்று கொண்டிருந்த லாரியின் மீது மொபெட் மோதியதில் இருவரும் தூக்கி வீசப்பட்டதில் நிலை தடுமாறி கீழே விழுந்தனர்.
இதில் லாரியின் சக்கரம் ஏறி இறங்கியதில் சஞ்சய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்து போனார். நேதாஜி பலத்த காயம் அடைந்து குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து போன சஞ்சய் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விபத்து ஏற்படுத்தி விட்டு தப்பி ஓடிய லாரி டிரைவரை தேடி வருகின்றனர்.