சென்னையில் பயங்கரம்; தெருவில் நடந்து சென்ற சிறுமியை தாய் கண் முன்னே முட்டி பந்தாடிய மாடு; அதிர வைக்கும் வீடியோ

சென்னையில் பயங்கரம்; தெருவில் நடந்து சென்ற சிறுமியை தாய் கண் முன்னே முட்டி பந்தாடிய மாடு; அதிர வைக்கும் வீடியோ

Published : Aug 10, 2023, 08:35 AM ISTUpdated : Aug 10, 2023, 02:25 PM IST

சென்னை அரும்பாக்கம் அருகே பள்ளி முடிந்து தாயுடன் வீட்டிற்கு நடந்து சென்றுகொண்டிருந்த சிறுமியை மாடு ஒன்று ஆக்ரோஷமாக முட்டி காயப்படுத்திய வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அரும்பாக்கம் அடுத்த எம் எம் டி ஏ காலனி, இளங்கோ நகர் தெருவில் சாலையில் தனது தாயுடன் சிறுமி, அவரது சகோதரருடன் நடந்து சென்றபோது பின்பகுதியில் வந்து கொண்டிருந்த சிறுவன் பசுமாடை பயம் காட்டுவது போல் குரல் கொடுத்துள்ளான். இதனால் மிரண்டுபோன பசுமாடு பசு மாடு சிறுமியை தனது கொம்பால் முட்டி தூக்கி இரண்டு மாடுகளும் காலால் வைத்து நசுக்கி தாக்கியது. 

இந்த நிலையில் அதை பார்த்துக் கொண்டிருந்த சிறுமியின் தாயார் கூச்சலிட்டு கதறியபடி சத்தம் போட்டதால் அருகில் இருந்தவர்கள் செங்கல் உள்ளிட்ட பொருட்களை எடுத்து அடித்து மாட்டை விரட்ட முயற்சித்தனர். ஆனால் சுமார் மூன்று நிமிடம் சிறுமியை விடாமல் மீண்டும் மீண்டும் முட்டியதால் சிறுமி பலத்த காயமடைந்தார். 

ஒரு வழியாக சிறுமியை மீட்டனர். இதனை அடுத்து சிறுமியை அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவமனையில் அனுமதித்தனர். சிறுமிக்கு நடந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியுள்ளது. பசுமாடு பள்ளி குழந்தையை வெறியோடு தாக்கும் சிசிடிவி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

வீடியோ வைரலாகி மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது தொடர்பாக விளக்கம் அளித்துள்ள சென்னை மேயர் ராதா கிருஷ்ணன், மாட்டினை அஜாக்கிரதையாக சாலையில் உலாவ விட்ட அதன் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

யார் அந்த சார்? அண்ணா பல்கலைக்கழக வழக்கில் புதிய திருப்பம்! வெளிவந்த உண்மை!
சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை! பீதியில் தலைநகர மக்கள்!
இன்று இரவு வெளுத்து வாங்கும் கனமழை - வானிலை ஆய்வு மையம் கொடுத்த அலெர்ட்!
சென்னையில் கொட்டிதீற்கும் கனமழை; பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து பேசிய முதல்வர் ஸ்டாலின்!
முன்கூட்டியே துவங்கும் பருவமழை - சென்னை மக்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கொடுத்த அலெர்ட்!
மறைந்த முரசொலி செல்வம்; குடும்பத்தினரின் கண்ணீருக்கு மத்தியில் துவங்கிய இறுதி ஊர்வலம்!
00:32பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.. த.வெ.க தலைவர் விஜயுடன் "Selfie" எடுத்து மகிழ்ந்த திமுக தொண்டர்கள்!
Exclusive : திடீரென 2200 ரூபாய் குறைந்த தங்கம் விலை... இது நல்லதா? தங்க, வைர வியாபாரிகள் சங்கத் தலைவர் பேட்டி
01:00போர்க்களமான நீதிமன்ற வளாகம்; ரௌடிகளை விட மோசமாக தாக்கிக்கொண்ட வழக்கறிஞர்கள்
Pa Ranjith New BSP Party President : பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராகிறாரா பா.ரஞ்சித்?
Read more