Watch : பைக்குள்ளிருந்து சீறி வந்து படமெடுத்த நல்ல பாம்பு! லாவகமாக மீட்ட பாம்பு பிடி வீரர்!

May 22, 2023, 10:31 AM IST

திருமங்கலம் சந்தைப்பேட்டை அருகில் வசித்து வரும் தண்டபாணி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவர் உறங்கிக்கொண்டிந்த வேளையில், அப்போது யாரோ எழுப்புவது போல் தோன்றவே விழித்துப் பார்த்த தண்டபாணிக்கு தலைக்கு அருகில் நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து நின்றிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். ஒரு வழியாக சுதாரித்து கட்டிலில் இருந்து எழுந்து பாம்பை அடிக்க முற்பட்டபோது பாம்பு நழுவி கட்டில் அருகில் இருந்த பை ஒன்றில் புகுந்தது.

உடனடியாக, டிராவல் பையின் ஜிப்பை மூடிய தண்டபானி, பாம்பு பிடி வீரரான சமூக ஆர்வலர் சகாதேவன் என்பவருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சகாதேவன் ஜிப்பை திறந்த போது சீறிக்கொண்டு வெளி வந்த நல்ல பாம்பை லாவகமாக பிடித்து அருகிலிருந்து காப்பு காட்டிற்குள் கொண்டுசென்று விட்டார்.