ஸ்ரீ வராகி அம்மன் ஆலய மயான கொள்ளை விழா; ஆயிரக்கணகான பக்தர்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு

Mar 11, 2024, 1:27 PM IST

கள்ளக்குறிச்சி மாவட்டம் வாணாபுரத்தில் அமைந்துள்ள ஸ்ரீ வீரபத்ரகாளியம்மன் ஸ்ரீ வராகி அம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசி மாத அமாவாசை நாளில்  மயான கொள்ளை திருவிழா வெகு விமரிசையாக நடைபெருவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டும் மயான கொள்ளை விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. இந்த விழாவில் பக்தர்கள் மாரியம்மன், பத்தரகாலி, காட்டேரி போன்ற வேடமிட்டும், அதே போன்று தங்களது விளை நிலங்களில் அறுவடை செய்யப்பட்ட தானியங்களான கொழுக்கட்டை, சுண்டல், மணிலா உள்ளிட்ட தானியங்களை சூறைவிட்டும் வானபுரம் பகுதியில் உள்ள மயானம் வரை  சென்று தங்களது நேர்த்தி கடனை செலுத்தினர். 

மயான வேட்டைக்கு போகும் வீரபத்ர காளி அம்மனை வேண்டி வழிபட்டனர். மேலும் மயானத்தில் சூறையிடும் தானியங்களை உட்கொண்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது. வானாபுரம் அருகில் உள்ள கிராமத்தில் இருந்து இந்த மயான கொள்ளையை காண ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்தனர்.