சீரும், சிறப்புமாக நடைபெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்

சீரும், சிறப்புமாக நடைபெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய திருக்கல்யாண வைபவம்

Published : Mar 22, 2024, 01:29 PM IST

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற கரூர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில், பங்குனி மாத திருக்கல்யாணம் வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது.

தென் தமிழகத்தில் புகழ்பெற்ற ஆலயங்களில் ஒன்றான ஸ்ரீ அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். பங்குனி பெருவிழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி உற்சவம் திருவீதி உலா காலையிலும், மாலையிலும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.

பங்குனிப் பெருவிழாவின் முக்கிய நிகழ்வாக சுவாமி திருக்கல்யாண வைபவம் வெகுவிமரிசையாக நடைபெற்றது இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு கல்யாண வெங்கட்ரமண சுவாமி மற்றும் அலங்காரவல்லி, சவுந்தரநாயகி உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்று பின்னர் ஆலயத்தின் தலைமை சிவாச்சாரியார் பிரத்தியேக யாக குண்டங்கள் அமைத்து யாக வேள்வி நடைபெற்ற பிறகு, சுவாமிக்கு கங்கணம் கட்டும் நிகழ்ச்சிக்கு நடைபெற்றது. 

இதனைத் தொடர்ந்து திருமண வைபவம் சிறப்பாக நடைபெற்றது.  பிறகு சுவாமிக்கு பால், பழம் கொடுக்கும் நிகழ்ச்சியும், மாலை மாற்றும் நிகழ்ச்சி, மொய் வைக்கும் நிகழ்ச்சியும் சிறப்பாக நடைபெற்றது. பின்னர் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர், அலங்காரவல்லி, சௌந்தரநாயகி உள்ளிட்ட தெய்வங்களுக்கு தூப தீபங்கள் காட்டி, நெய்வைத்தியம் சமர்ப்பிக்கப்பட்டு, கற்பூரத்துடன் மகா தீபாராதனை நடைபெற்றது.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!
Read more