Watch : முக்தீஸ்வரர் கோவிலில் இறைவனை வணங்கும் சூரிய கதிர்கள்!

Watch : முக்தீஸ்வரர் கோவிலில் இறைவனை வணங்கும் சூரிய கதிர்கள்!

Published : Sep 21, 2022, 04:37 PM IST

மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு உட்பட்ட தெப்பக்குளம் முக்தீஸ்வரர் ஆலயத்தில் சூரியக்கதிர் நேரடியாக கருவறைக்குள் விழுந்து இறைவனை பூஜிக்கும் நிகழ்வு நடைபெற்றது . இதனையொட்டி ஏராளமான பக்தர்கள் கோயிலுக்கு அதிகாலையிலேயே வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
 

இந்திரனின் வாகனமான வெள்ளை யானை (ஐராவதம்) சாபவிமோசனம் பெற்ற ஸ்தலமானதும் , மதுரையிலுள்ள பஞ்சபத ஸ்தலங்களில் வாயு தத்துவ ஸ்தலமாகவும் விளங்கும் மதுரை முக்தீஸ்வரர் கோயில் சூரியனுடைய கதிர்கள் இறைவனை பூஜிக்கும் தலங்களில் சிறப்பு பெற்ற ஒன்றாகவும் விளங்கி வருகிறது .

அந்த வகையில் ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 12 நாட்களும் , செப்டம்பர் மாதம் 12 நாட்களும் என வருடத்தின் இரண்டு முறை சூரிய ஒளி இறைவன் மீது நேரடியாக பிரகாசிக்கிறது .

சூரிய பகவானே நேரடியாக சிவனின் மீது தன் ஒளிக்கதிர்களை வீசி பூஜிப்பதால் இந்த நாட்கள் விசேஷமாகச் சிறப்பிக்கப்பட்டு , அவ்வேளையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றது.

மேலும், சூரிய பூஜை நிகழும் அதிசயக் கோவில்களில் சூரிய பூஜை நாட்களில் வணங்கி வழிபட்டால் மேன்மை அடையலாம் என கருதப்படுவதால் , இந்நிகழ்வினை காண மதுரையின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் அதிகாலையிலேயே கோயிலுக்கு வந்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

03:48திருப்பதியில் திருமணம்: டிடிடி வழங்கும் இலவச திருமண சேவை!!
Watch | பழனியில் நடைபெற்று வரும் முத்தமிழ் முருகன் மாநாடு!
00:42பாதாள கங்கையில் லிங்கத்தை சுற்றி படமெடுத்து நின்ற நாகபாம்பு; பரவசத்துடன் பார்த்த பக்தர்கள்
01:39அடுத்தடுத்து அறுந்து விழுந்த திருத்தேர் வடங்கள்; ஆனித்திருவிழாவில் வாடிய முகத்தோடு காத்திருக்கும் பக்தர்கள்
03:08சமயபுரம் பகுதியில் பலத்த கனமழை.. மாரியம்மன் கோவிலை சூழ்ந்த வெள்ளத்தால் பக்தர்கள் அவதி!
02:10Palani Murugan Temple : பழனி முருகன் கோவில் - 26 லட்சம் ரூபாய் செலவில் பேருந்து வழங்கி அசத்திய பக்தர்!
01:30 கொட்டும் மழையிலும் முத்துமாரியம்மன் வீதி உலா.. பக்தி பரவசத்தில் பக்தர்கள் ஓம் சக்தி பாராசக்தி முழக்கம்..!
04:37Murugan Temple : பிரசித்தி பெற்ற திருத்தணி முருகன் கோவில் - இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சாமி தரிசனம்!
05:29Namakkal : ஸ்ரீபொன்வரதராஜ பெருமாள் கோவில் தேரோட்டம்.. திரளாக வந்த பக்தர்கள் - நீர் மோர் வழங்கிய இஸ்லாமியர்கள்!
02:02திருத்தணியின் விண்ணை பிளந்த அரோகரா கோஷம்! பக்தி பரவசத்துடன் தேரினை வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்..!