பிறவி கடன், திருமண தடை நீங்கும் தர்மபுரீஸ்வரர் ஆலய சுவாமி வீதியுலா; பக்தர்கள் பரவசத்துடன் வழிபாடு

Jan 19, 2024, 7:29 PM IST

திருவாரூர் மாவட்டம் வடகண்டம் பகுதியில் அமைந்துள்ள மிகவும் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஸ்ரீ சொர்ணாம்பிகை சமேத தர்மபுரீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் தேய்பிறை அஷ்டமி அன்று பைரவரை அர்ச்சனை செய்து வழிபட்டால் பிறவி கடன், திருமண தடை நீங்கும் என்பது ஐதீகம். மேலும் ஒவ்வொரு பிரதோஷத்தின் நாளன்றும் சிவபெருமானை வழிபட்டால் மன அமைதியும், பகை அகலும் என்பது இப்பகுதி மக்களின் நம்பிக்கையாகும். 

ஆண்டுதோறும் தை மாதத்தில் சுவாமி வீதி உலா காட்சி சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இன்று சொர்ணபுரீஸ்வரர் ஆலயத்தில் காலை முதலே சந்திரசேகர சுவாமி மற்றும் சொர்ணாம்பிகை அம்பாளுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து தீபாரதனை பஞ்சமுக தீபாரதனை மற்றும் மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டது. மேலும் சந்திரசேகர சுவாமி மற்றும் சொர்ணாம்பிகை அம்பாளுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாரதனை காண்பிக்கப்பட்டு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தனர். 

அதனைத் தொடர்ந்து சுவாமி வீதி உலா சிவவாத்தியங்கள் நடைபெற்றது. சுவாமி வீதி உலா காட்சியினை அப்பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் சுவாமியை வரவேற்கும் விதமாக வீட்டு வாசலில் வண்ண கோலமிட்டும் அர்ச்சனை செய்தும் வழிபட்டனர்.